சுடச்சுட

  

  கர்நாடக அரசுக்குச் சொந்தமான காவிரி இல்லம் ரூ. ஒரு கோடியில் சீரமைக்கப்படுகிறது.

  பெங்களூரு குமாராப் பூங்கா கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அரசு இல்லத்தில் முதல்வர் சித்தராமையா வசித்து வருகிறார். இந்த நிலையில், குமாரகுருபா சாலையில் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான காவிரி இல்லத்திற்கு குடிபெயர முதல்வர் சித்தராமையா திட்டமிட்டுள்ளார்.

  இதற்காக காவிரி இல்லத்தை ரூ. ஒரு கோடியில் சீரமைக்கும் பணியில் பொதுப்

  பணித் துறையினர் ஈடுபட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. 

  இந்த இல்லத்தில் சமையலரை, பூஜை அறை, கழிவறைகள் ஆகியவை மாற்றியமைக்கப்பட்டுள்ளன. வாஸ்துபடி பூஜை அறையின் வாயில் மேற்கில் இருந்து கிழக்கு திசைக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

  பெல்காமில் வருகிற 25-ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை குளிர்கால கூட்டத் தொடர் முடிவடைந்ததும், காவிரி இல்லத்திற்கு சித்தராமையா குடிப்பெயர்வார் என  எதிர்பார்க்கப்படுகிறது.

  இதுகுறித்து முதல்வர் சித்தராமையா கூறியது:

  காவிரி இல்லத்தை பொதுப்பணித் துறையினர் பராமரித்து வருகின்றனர்.

  யார் கேட்டாலும் பராமரிப்புக் கணக்கு அளிக்கப்படும். குமாராப் பூங்கா கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இல்லம் மிகவும் சிறியதாக உள்ளது.

  இதனால், அங்கு பார்வையாளர்களைச் சந்திக்க போதிய வசதி இல்லை. எனவே, காவிரி இல்லத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளேன்.

  அங்கு தாராளமான

  இடவசதி உள்ளது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai