சுடச்சுட

  

  குழந்தைகளுக்கு மூலிகை ஊட்டச்சத்து திட்டம்

  By பெங்களூரு,  |   Published on : 16th November 2013 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் குழந்தைகளுக்கு மூலிகை ஊட்டச்சத்து  திட்டத்தை அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் யூ.டி.காதர் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.

  பெங்களூரு விகாஸ் செüதாவில் ஆயுஷ் துறை சார்பில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு மூலிகையில் இருந்து தயாரித்த பிஸ்கட், சாறுகளை வழங்கி மூலிகை ஊட்டச்சத்துத் திட்டத்தைத் தொடக்கிவைத்து அவர் பேசியது: கர்நாடகத்தில் அங்கன்வாடி மையங்களில் ஏழைக் குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்தக்  குழந்தைகள் ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் அவதிப்படுகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில், ஆயுஷ் துறை சார்பில் மூலிகை ஊட்டச்சத்துத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி மையங்களில் உள்ள 3 முதல் 6 வயதுக் குழந்தைகளுக்கு மூலிகை பிஸ்கட்,  சிரப் வழங்கப்படும். முதல் கட்டமாக பாகல்கோட்டை, பிஜாப்பூர் ஆகிய இரண்டும் மாவட்டங்களில் அங்கன்வாடி மையங்களில் உள்ள 3 ஆயிரம் குழந்தைகளுக்கு மூன்று மாதங்களுக்கு இந்தத் திட்டம் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்படும்.

  பின்னர், மாநிலம் முழுவதும் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும். மூலிகை ஊட்டச்சத்துகளை எடுத்துக் கொள்ளும் குழந்தைகளின் ஆரோக்கியம், உடல் எடை, உயரம் ஆகியவை பதிவு செய்யப்பட்டும். இந்தத் திட்டத்திற்கு ரூ. 30 லட்சம் செலவிடப்படும் என்றார் அவர்.

  விழாவில் மாநில ஆயுஷ் துறை இயக்குநர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai