சுடச்சுட

  

  சபரி மலைக்கு செல்லும் பக்தர்களுக்காக பெங்களூரு சிட்டி-கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

  இதுகுறித்து தென் மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  சபரிமலைக்கு செல்லும் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பெங்களூரு சிட்டி- கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

  கொச்சுவேலி- பெங்களூரு சிட்டி (ரயில் எண்-06314) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில்கள் கொச்சுவேலியில் இருந்து வருகிற 28, டிசம்பர் 12, 26, ஜனவரி 9 ஆகிய தேதிகளில் இரவு 8.15 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 1.50 மணிக்கு பெங்களூரு சிட்டியை வந்தடையும்.

  மறு மார்க்கத்தில் பெங்களூரு சிட்டியிலிருந்து கொச்சுவேலிக்கு (ரயில் எண்-06313) வருகிற 29, டிசம்பர் 13, 27, ஜனவரி 10 ஆகிய தேதிகளில் மாலை 3.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு கொச்சுவேலியைச் சென்றடையும்.

  இந்த ரயில்கள் கொல்லம், காயங்குளம், மாவெலிகரா, செங்கனூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாக்குளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, ஒசூர், பெங்களூரு கன்டோன்மென்ட் வழியாக செல்லும்.

  இந்த ரயில்களில் குளிரூட்டப்பட்ட ஈரடுக்கு பெட்டி ஒன்றும், குளிரூட்டப்பட்ட மூன்றடுக்கு பெட்டி இரண்டும், இரண்டாம் வகுப்பில் நான்கு படுக்கைப் பெட்டிகளும், இருக்கைப் பெட்டிகள் ஆறும், பொதுப் பெட்டிகள் ஆறும், இருக்கை- சரக்கு பெட்டிகள் இரண்டும் இணைக்கப்பட்டிருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai