சுடச்சுட

  

  தென் மேற்கு ரயில்வே பொது மேலாளராக ராஜீவ் பார்கவா நியமிக்கப்பட்டார்.

  இதுகுறித்து தென் மேற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  தென் மேற்கு ரயில்வே பொது மேலாளராக இருந்த ஏ.கே.மிட்டல் ரயில்வே வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதால், அவரது பதவியில் ராஜீவ் பார்கவா நியமிக்கப்பட்டுள்ளார்.

  பெங்களூரு எலஹங்காவில் அமைந்துள்ள ரயில் சக்கர தொழில்சாலையின் பொது மேலாளராகப் பணியாற்றி வரும் அவர், கூடுதல் பொறுப்பாக தென் மேற்கு ரயில்வே பொது மேலாளராகவும் பணியாற்றுவார்.

  ரூர்கி பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்ற ராஜீவ் பார்கவா, மத்திய பொதுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய அகில இந்திய பொறியியல் தேர்வில் முதலிடம் பிடித்த இவர், கடந்த 1974-ஆம் ஆண்டு, இந்திய ரயில்வேயில் சிவில் பொறியாளராக சேர்ந்தார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai