Enable Javscript for better performance
\\\"பெங்களூருவை குப்பையில்லா நகரமாக்குவோம்- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூருவை குப்பையில்லா நகரமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று, கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கேட்டுக் கொண்டார்.

    பெங்களூரு ஹொரோஹள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் பள்ளிக் கட்டடம், மகளிர் மாளிகை, வார்டு அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை திறந்துவைத்து அவர் பேசியது:

    பெங்களூருவில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தர அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். மாநகரின்  மேம்பாட்டுக்காக பல்வேறு புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

    பெங்களூருவை குப்பையில்லா நகராக்குவோம். மேலும், பெங்களூருவில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றார் ராமலிங்க ரெட்டி.

    விழாவில் மேயர் சத்தியநாராயணா, எம்.எல்.ஏ. எச்.சோமசேகர், வார்டு நிலைக்குழுத்  தலைவர் பசவராஜ், மாமன்ற உறுப்பினர் ஹனுமந்தே கெüடா உள்ளிட்டோர் கலந்து

    கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai