சுடச்சுட

  

  மத நல்லிணம் சிறக்க திரைப்படங்கள் பங்காற்ற வேண்டும்

  By பெங்களூரு,  |   Published on : 16th November 2013 05:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாட்டில் மத நல்லிணக்கம் சிறந்து விளங்க திரைப்படங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று, மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜே.டி.சீலம் கேட்டுக் கொண்டார்.

  பெங்களூருவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மத நல்லிணக்க கன்னடத் திரைப்பட விழாவைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:

  பொதுமக்களை மயக்கும் ஊடகங்களில் திரைப்படம் முக்கிய பங்காற்றுகிறது. எனவே, திரைப்படங்கள் மூலம் பொதுமக்களிடையே மத நல்லிணக்க சிந்தனைகளைப் போதிக்க வேண்டும்.

  மத நல்லிணக்கத்தில் கர்நாடகம் சிறந்த முன்னோடியாக திகழ்கிறது. எனினும், மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், சில மதவாத சக்திகள் முயற்சித்து வருகின்றன.

  இந்தியாவின் உயிர்நாடியாக மத நல்லிணக்கம் விளங்குகிறது. சமூகத்தில் மத நல்லிணக்கம் தழைத்தோங்க திரைப்படங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். அனைத்து மதத்தினரும் சுதந்திரமாக வாழும் சூழ்நிலை தொடர வேண்டும் என்றார் அவர்.

  விழாவில் கர்நாடக திரைப்பட வர்த்தகசபைத் தலைவர்

  கங்கராஜு, எழுத்தாளரும், இயக்குநருமான பரகூர் ராமசந்திரப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai