Enable Javscript for better performance
மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு- Dinamani

சுடச்சுட

    

    மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

    By பெங்களூரு,  |   Published on : 16th November 2013 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூருவில் பாஜக சார்பில், ஞாயிற்றுக்கிழமை (நவ.17) நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அந்தக் கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி பங்கேற்பதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பெங்களூரு அரண்மனை மைதானத்தில் வருகிற 17-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் பேரணி, பொதுக் கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இந்தக் கூட்டத்தில் 3.5 லட்சம் பாஜக தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என  எதிர்பார்க்கப்படுகிறது.

    பொதுக் கூட்டம் நடைபெறும் அரண்மனை மைதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகரக் காவல் ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

    மோடி பங்கேற்கும் கூட்டத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என  எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக் கூட்டம் நடைபெறும் வளாகத்தில் தீப்பெட்டி, தண்ணீர் பாட்டில், பட்டாசு போன்ற பொருள்கள் கொண்டுவருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்புப் பணியில் 10 டிசிபிக்கள், 25 ஏசிபிக்கள், 10 ஆய்வாளர்கள், 250 துணை ஆய்வாளர்கள், 300 உதவி ஆய்வாளர்கள், 3 ஆயிரம் காவலர்கள், 800 ஊர்க்காவல் படையினர், 500 சிவில் போலீஸார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    அண்மையில் மோடி கலந்து கொண்ட பாட்னா பொதுக் கூட்ட வளாகத்தில் குண்டு வெடித்ததால், பெங்களூருவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுக் கூட்டம் நடைபெறும் மைதானத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    கடந்த 10 நாள்களாக இந்த மைதானத்தை போலீஸ் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜே.சி.நகர், யஷ்வந்தபுரத்தில் மது விற்பனைக்குத்  தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai