சுடச்சுட

    

    "ரசயானக் களிம்புகள் உடல் அழகைக் கெடுக்கும்

    By 'பெங்களூரு,  |   Published on : 16th November 2013 05:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரசாயனக் களிம்புகள் பயன்படுத்துவதால் உடல் அழகு பாதிக்கும் என்று, அனூஸ் இயற்கை மூலிகை அழகுக்கலை நிறுவனத் தலைவர் அனுராதா தெரிவித்தார்.

    பெங்களூரு ராஜாஜிநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் அனூஸ் இயற்கை மூலிகை அழகுக்கலைக் கூடத்தைத் திறந்துவைத்து அவர் பேசியது:

    மூலிகையின் மகத்துவத்தை அறிந்த நாடு இந்தியா. நமது முன்னோர்கள் நீண்டகாலம் வாழ்ந்து, பல சாதனைகளை நிகழ்த்தியதற்கு மூலிகைகள்தான் காரணம். சிறுகாயம் முதல் பெரிய நோய் வரை அனைத்து வகையான உடல் ஆரோக்கியத்துக்கும் மூலிகைகள் முக்கிய பங்காற்றியுள்ளன.

    மூலிகைகளுக்குப் பதிலாக, வேதிப் பொருள்களால் தயாரிக்கப்படும் களிம்புகளை பயன்படுத்துவதால் உடல் அழகு பாதிக்கும். எனவே, மூலிகை அடிப்படையிலான களிம்புகளை பயன்படுத்த வேண்டும் என்றார் அவர்.

    விழாவில் அழகுக்கலைக் கூடத்தின் இயக்குநர் விஜய்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai