சுடச்சுட

  

  சமூக நலத் திட்டங்களுக்கான நிதியைக் குறைக்க பாஜக எதிர்ப்பு

  By பெங்களூரு,  |   Published on : 17th November 2013 05:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சமூக நலத் திட்டங்கள் மற்றும் 6 முக்கிய திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியை குறைக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு

  பாஜக எதிர்ப் புத் தெரிவித்துள்ளது.

  இதுகுறித்து பெங்களூருவில் சனிக்கிழமை பாஜக தேசிய துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் கூறியது:

  நிதிப் பற்றாக்குறையை 4.8 சதத்துக்குள் வைத்திருப்பதற்காக, சமூக நலத் திட்டங்கள், வேலைவாய்ப்பு, சுகாதாரம், குடிநீர், வீட்டு வசதி, மின் வசதி, ஊரக சாலை மேம்பாடு போன்ற மத்திய அரசின் முதன்மையான 6 திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை குறைக்க மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

  இந்தத் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியே மிகவும் குறைவு. ஏற்கெனவே இந்தத் திட்டங்களுக்கு நிதி குறைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் குறைப்பது சரியான நடவடிக்கை அல்ல.

  சில்லறை வர்த்தக பணவீக்கம் 10.09 சதத்தை தொட்டுள்ளது. தனியார் முதலீடுகள் வரவில்லை. 1991-ஆம் ஆண்டில் இந்தியா பொருளாதார நெருக்கடியை சந்தித்ததுபோல, நிதிப் பற்றாக்குறை, நடப்புக் கணக்கு பற்றாக்குறை மிகவும் மோசமாக உள்ளது.

  இந்திய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய மறுக்கிறார்கள். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பவில்லை. மத்திய அரசு எடுத்துள்ள முக்கிய முடிவுகளில் வரலாறு காணாத ஊழல் நடந்துள்ளது.

  இந்த நிலையில், பொதுமக்களின் நலனுக்காக செலவிடப்படும் நிதியில் மத்திய அரசு கைவைத்துள்ளது.

  தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் பணவீக்கம் ஏழைகளை வாட்டி வதைத்து வருகிறது.

  இந்த நிலையில், சமூக நலத் திட்டங்கள் மற்றும் முக்கிய திட்டங்களுக்கான நிதியைக் குறைத்தால், அதுசாதாரண மக்களின் வளர்ச்சி, நல்வாழ்வை வெகுவாகப் பாதிக்கும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai