சுடச்சுட

  

  "சமூக மேம்பாட்டில் ஆண்களின் பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும்'

  By பெங்களூரு,  |   Published on : 17th November 2013 05:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சமூக மேம்பாட்டில் ஆண்களின் பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும் என்று, கிரிஸ்ப் தன்னார்வத் தொண்டு அமைப்பின் தலைவர் குமார் ஜாகிர்தார் தெரிவித்தார்.

  பன்னாட்டு ஆண்கள் தினத்தை முன்னிட்டு, கான்பிடர் இந்தியா மற்றும் கிரிஸ்ப் தன்னார்வ தொண்டு அமைப்புகள் சார்பில், பெங்களூரு மகாத்மா காந்தி சாலையில் அமைந்துள்ள மெட்ரோ ரங்கோலி அரங்கில் சனிக்கிழமை ஆண்களுக்கான கண்காட்சியைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:

  அண்மைக் காலமாக ஆண்களைப் புறக்கணிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. தந்தையாக, மகனாக, அண்ணனாக, தம்பியாக, சித்தப்பாவாக, மாமாவாக ஆண்கள் முனைப்புடன் செய்யும் கடமைகளை தட்டிக் கழிக்கும் மனப் போக்கு அதிகரித்து வருகிறது.

  ஆண்களுக்கு அளிக்க வேண்டிய அங்கீகாரத்தை சமூகம் பறித்துக் கொண்டுள்ளது. எனவே, சமூக மேம்பாட்டில் ஆண்களின் பங்களிப்பை சமுதாயம் அங்கீகரிக்க வேண்டும். ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காண சமூகமும், அரசுகளும் முன்வர வேண்டும்.ஆண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நிலையை சமூகம் உருவாக்க வேண்டும். ஆண்களின் கருத்துகளுக்கு வலு சேர்ப்பதற்காக பன்னாட்டு ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

  இதை வெளிப்படுத்தும் பல புகைப்படங்கள், காணொளிகள், நூல்கள் ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது என்றார் அவர்.

  விழாவில் கான்பிடர் அமைப்புத் தலைவர் அனில்குமார், ஆராய்ச்சியாளர் விராக் தூலியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  இந்தக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை (நவ.17) நிறைவடைகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai