சுடச்சுட

  

  சி.என்.ஆர். ராவ், சச்சினுக்கு பாரத ரத்னா விருது: சித்தராமையா வாழ்த்து

  By பெங்களூரு  |   Published on : 17th November 2013 05:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாரத ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  கர்நாடகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் அறிவியல் துறையில் பங்காற்றியதை பாராட்டியும், கிரிக்கெட் துறையில் சாதனைப் படைத்ததற்காக சச்சின் டெண்டுல்கருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.

  இந்த விருது பெறும் இருவருக்கும் முதல்வர் சித்தராமையா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி:

  சி.என்.ஆர்.ராவ், சச்சின் டெண்டுல்கர் இருவரும் இந்தியாவின் இரு ரத்தினங்கள் என்பதில் சந்தேகமில்லை. கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் ரசாயனத் துறையில்  தனது அறிவியல் வாழ்க்கையைத் தொடங்கிய சி.என்.ஆர்.ராவ், 1,500 ஆராய்ச்சிக் கட்டுரைகள், 45 அறிவியல் நூல்களை எழுதி சாதனை படைத்துள்ளார்.

  கர்நாடகத்தைச் சேர்ந்த ராவுக்கு பாரத ரத்னா வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல, கடந்த 24 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் உலகை ஆண்டு வந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனை போற்றுதலுக்குரியது.

  சச்சினுக்கு பாரத ரத்னா அளிக்கப்படுவது விளையாட்டுத் துறைக்கு அளிக்கப்பட்டுள்ள கெüரமாகும். அவரவர் துறையில் சாதனைப் படைத்திருக்கும் இருவருக்கும் பாரத ரத்னா விருது வழங்கி நாடு தன்னை கெüரவப்படுத்திக் கொண்டுள்ளது என்று அதில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் தேவ கெüடா, கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் குமாரசாமி, பாஜக மாநிலத் தலைவர் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோரும் சி.என்.ஆர்.ராவ், சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai