சுடச்சுட

  

  ஜனநாயகத்தைப் பாதுகாக்க பத்திரிகைகளின் பங்களிப்பு முக்கியம்

  By பெங்களூரு,  |   Published on : 17th November 2013 05:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நமது நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க பத்திரிகைகளின் பங்களிப்பு முக்கியம் என்று மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.

  கர்நாடக செய்தித் துறை, கர்நாடக ஊடக அகாதெமி கூட்டாக பெங்களூருவில் சனிக்கிழமை நடத்திய கருத்தரங்கை தொடக்கிவைத்து அவர் பேசியது:

  இந்தியர்களிடையே சுதந்திர வேட்கையை ஏற்படுத்துவதற்காக காந்தியடிகள் ஹரிஜன் பத்திரிகையை நடத்தினார்.

  இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு பத்திரிகைகள் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றன. நமது நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க பத்திரிகைகளின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என்றார் அவர்.

  கருத்தரங்கில் காந்தியடிகளின் பேத்தி சுமித்ரா காந்தி குல்கர்னி, ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ., செய்தித் துறை துணை இயக்குநர் பிருங்கேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai