சுடச்சுட

  

  "ஜாதி முறையால் உருவாகியுள்ள சமூகப் பிளவு கவலையளிக்கிறது'

  By பெங்களூரு,  |   Published on : 17th November 2013 05:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியாவில் ஜாதி முறையால் உருவாகியுள்ள சமூகப் பிளவு கவலையளிக்கிறது என்று, நோபல் பரிசு பெற்ற முன்னாள் பேராயர் டெஸ்மன்ட் டூடு தெரிவித்தார்.

  பெங்களூருவில் செüக்கியா ஒருங்கிணைந்த சுகாதார மையம் சார்பில், சனிக்கிழமை நடைபெற்ற பன்னாட்டு சுதாகார மாநாட்டில்  அவர் மேலும் பேசியது:

  தென் ஆப்ரிக்காவின் விடுதலையில் இந்தியாவின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. நிறவெறியை பின்பற்றும் வெள்ளையர் ஆட்சி செய்த தென் ஆப்ரிக்கா மீது பொருளாதாரத் தடைவிதிக்க ஐ.நா.மன்றத்தை இந்தியா வற்புறுத்தியது.

  தென் ஆப்ரிக்காவின் விடுதலைப் போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும் இந்தியாவின் முயற்சிகளுக்கு நாங்கள் நன்றிக் கடன்பட்டுள்ளோம். தென் ஆப்ரிக்காவின் விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் போராட்டம் நடத்திய நெல்சன் மண்டேலா, நிற வெறியை முடிவுக்கு கொண்டு வந்த பிறகு, அதற்கு காரணமானவர்களை பழிவாங்கவில்லை. மாறாக, நிற வெறியைக் கடைபிடித்தவர்களுக்கு மன்னிப்பும், சமரசத்தையும் அன்பளிப்பாக அளித்தார்.

  தென் ஆப்ரிக்காவில் நிறவெறி தீண்டாமை முடிவுக்கு வந்த பிறகு, மக்களை பழிவாங்கும் உணர்வில் இருந்து திசைமாற்றி அன்பையும், அமைதியையும் நிலைநாட்டினார். இதன்மூலம்,  உலகிற்கு பெருந்தன்மையை நெல்சன் மண்டேலா போதித்தார்.

  இந்தியாவில் இருக்கும் ஜாதியால் உருவாகியுள்ள சமூகப் பிளவு கவலையளிப்பதாக உள்ளது.

  சிரியர்கள், சோமாலியர்கள், பாலஸ்தீனியர்கள் உள்ளிட்ட அனைவரும் கசப்பான உணர்வுகளை மறந்து ஒன்றாகும் புரட்சி ஏற்பட்டால், அப்போதுத்தான் உலகம் அழகானதாகக் காட்சியளிக்கும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai