சுடச்சுட

  

  தீ விபத்திலிருந்து மின் மாற்றிகளைபாதுகாக்க நவீன தொழில்நுட்பம்

  By பெங்களூரு  |   Published on : 17th November 2013 05:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தீ விபத்திலிருந்து மின் மாற்றிகளைப் பாதுகாக்க நவீன  தொழில்நுட்பம் பெங்களூருவில் சனிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

  பெங்களூருவில் அமெரிக்காவின் சென்ட்ரி நிறுவனம் சார்பில், சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மின் மாற்றிகளை தீ விபத்தில் இருந்து பாதுகாக்கும் "பாஸ்ட் டி- பிரசரைசேஷன் சிஸ்டம்' என்ற புதிய தொழில்நுட்பத்தை இந்தியாவில் முதல் முறையாக அறிமுகப்படுத்தி அந்த நிறுவனத்தின் தலைவர் பில் கென்ட்ரிக் கூறியது:

  மின் மாற்றிகள் அடிக்கடி தீ விபத்தில் சிக்கி பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க  "பாஸ்ட் டி-பிரசரைசேஷன் சிஸ்டம்'  என்ற புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  இந்த புதிய தொழில்நுட்பத்தை மின் மாற்றியில் பயன்படுத்தினால், தீ விபத்து நிகழ 100 சதம் வாய்ப்பு கிடையாது. இதன்மூலம், பெரிய தீ விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத்  தடுக்கலாம். இந்த நவீன தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் எங்கள் நிறுவனம் பெருமையடைகிறது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai