சுடச்சுட

  

  பெரிய துறைமுகங்களை நவீனப்படுத்த தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்

  By பெங்களூரு,  |   Published on : 17th November 2013 05:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நமது நாட்டின் பெரிய துறைமுகங்களை நவீனப்படுத்த தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

  பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள காண்ட்லா துறைமுகத்தில் ஆண்டுக்கு 40 லட்சம்  மெட்ரிக் டன் பொருள்களைக் கையாளும் விதத்தில்  ரூ.216.55 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 புதிய உலர் சரக்கு கையாளும் முனையங்களை கானொலிக் காட்சி   மூலம் தொடக்கிவைத்து அவர் பேசியது:

  கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8 சதத்தை தொட்டுள்ளது. இதனால், துறைமுகம், கடல்சார் உள்கட்டமைப்புகளின் தேவை பெருகியுள்ளது. இதை நிறைவு செய்யும் வகையில் தனியார்- அரசு கூட்டு முயற்சிகளின் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

  கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகங்களை நவீனப்படுத்த, மேம்படுத்த துணிச்சலாக எடுக்கப்பட்ட முயற்சிகள், இவற்றின் வளர்ச்சி வேகத்தை நிலையாக வைத்திருக்க உதவும்.

  2012-13-ஆம் நிதியாண்டில் ரூ.6700 கோடி மதிப்பிலான 32 துறைமுகத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  அதேபோல, நிகழ் நிதியாண்டிலும் ரூ.26 ஆயிரம் கோடியில் 30 திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளோம். துறைமுகங்களின் வளர்ச்சியில் மத்திய அரசு எடுத்துவரும் முயற்சியால் காண்ட்லா துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 9.4 கோடி மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.

  இது 10 கோடி  மெட்ரிக் டன்னாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். காண்ட்லா துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறனை மேம்படுத்த முன்வரும் முதலீட்டாளர்களை வரவேற்கிறேன். நடமாடும் துறைமுக கிரேன்கள் காண்ட்லா துறைமுகத்தின் திறனை மேம்படுத்தும்.

  துறைமுகம் மற்றும் கடல்சார் கட்டமைப்புகளை மேம்படுத்த தொடர் முயற்சிகள் தேவைப்படுகிறது. இதில் அனைவரும் பங்காற்றி, உலகத் தரம் வாய்ந்த துறைமுகங்களை உருவாக்க முன்வர வேண்டும். நமது நாட்டின் பெரிய துறைமுகங்களை நவீனப்படுத்த தொடர் முயற்சிகள் எடுக்கப்படும் என்றார் அவர். விழாவில் துறைச் செயலாளர் விஸ்வபதி திரிபாதி, இணைச் செயலாளர்கள் எம்.சி.ஜெüஹரி, என்.முருகானந்தம், துறைமுகத் தலைவர் வகேலா உள்ளிட்டோர்

  கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai