சுடச்சுட

  

  கர்நாடக தொழில் வர்த்தகசபை கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் வணிக திட்டப் போட்டிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  இதுகுறித்து அந்தக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கை:

  வணிகவியல் படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் கூட்டமைப்பு சார்பில், வணிக திட்டப் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள இளநிலை, முதுநிலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  வர்த்தக ரீதியாக சாத்தியமான, புதுமையான செயல் திட்டங்களை போட்டிக்கு அனுப்பி வைக்கலாம். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ. ஒரு லட்சம் பரிசு மற்றும்  கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் அளிக்கப்படும்.  மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ச்ந்ஸ்ரீஸ்ரீண்.ர்ழ்ஞ் என்ற இணையதளத்திலோ அல்லது 080-22262355, 22262157 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai