சுடச்சுட

  

   காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே பாஜகவின் நோக்கம்: கட்சியின் தேசியத்தலைவர் ராஜ்நாத்சிங்

  By dn  |   Published on : 18th November 2013 05:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே பாஜகவின் நோக்கம் என்று பாஜகவின் தேசியத்தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

  பெங்களூரு, அரண்மனை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பாஜகவின் 'இந்தியாவை வெல்லசெய்வோம்' பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பாஜகவின் தேசியத்தலைவர் ராத்நாத்சிங் பேசியது: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்கு கூட்டணி ஆட்சியில் வறுமை, வேலையில்லாமை போன்ற பல்வேறு பிரச்னைகள் தலைவிரித்தாடுகின்றன. அதேபோல காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் விண்ணை முட்டும் அளவுக்கு பரந்துவிரிந்துள்ளது. இப்பிரச்னைகளில் இருந்துவிடுபடவேண்டுமானால், காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும். காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே பாஜகவின் தலையாய நோக்கமாக உள்ளது. காங்கிரஸ் கட்சி வாக்குவங்கி அரசியல் நடத்துகிறது. மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வுகாண்பதில் காங்கிரஸ் அரசு முனைப்பாக செயல்படவில்லை. ஆனால், பாஜக மக்கள் பிரச்னைகளை தீர்க்க முனைப்புடன் செயலாற்றும். நாட்டில் நிலவும் பிரச்னைகளுக்குதீர்வுகாண திட்டம் வகுப்பதில் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்துள்ளது. இதனால் நாட்டில் பயங்கரவாதம் போன்ற பிரச்னைகள் பூதாகரமாகியுள்ளது. நாட்டின் எல்லையில் நமது வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுவீழ்த்தினாலும், எல்லைப்பகுதியில் சீனா அக்கிரமித்தாலும் பிரதமர் மன்மோகன்சிங் மௌனம் காப்பதை தவிர, உறுதியான பதிலடி கொடுக்க தவறிவிட்டார். சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் அதிலிருந்து மீண்டும் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி பாராட்டும்படி இல்லை. பயங்கரவாதத்திற்கு தக்கபதிலடி கொடுக்கும் திறன் நரேந்திரமோடியிடம் மட்டுமே உள்ளது. நரேந்திரமோடியை பிரதமராக்க மக்கள் விரும்புகிறார்கள்.

  பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடியை அறிவித்துள்ளோம். இதில் மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியமில்லை. தேனீர் விற்றவர் பிரதமர் ஆகமுடியாது என்று மத்திய அமைச்சர் கபில்சிபல் கூறியுள்ளார். தேனீர் விற்றவர் தான் இந்தியாவின் பிரதமராவார் என்பதை மக்கள் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai