சுடச்சுட

  

  அறிவியலுக்குப் போதுமான நிதி ஒதுக்காத அரசியல்வாதிகள் முட்டாள்கள்: சி.என்.ஆர்.ராவ்

  By dn  |   Published on : 18th November 2013 02:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  "அறிவியலுக்குப் போதுமான நிதி ஒதுக்காததால், அரசியல்வாதிகள் முட்டாள்கள்' என்று பாரத ரத்னா விருதுக்கு தேர்வாகியுள்ள விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் விமர்சித்தார்.

  இதுகுறித்து பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சிகளுக்குப் போதுமான நிதி ஆதாரங்களை ஒதுக்க வேண்டும்.

  அரசு அளித்துள்ள நிதியைக் காட்டிலும், அளவுக்கு அதிகமாக அறிவியல் ஆராய்ச்சிகளை அறிவியல் துறை செய்து காட்டியுள்ளது. அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு அரசியல்வாதிகள் போதுமான நிதி ஒதுக்கவில்லை. இதனால், அவர்கள் முட்டாள்கள்.

  எங்களுக்கு கிடைத்த நிதிக்குத் தகுந்தவாறு பணி செய்துள்ளோம்.  இந்தியாவில் அறிவியல் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது மட்டுமல்லாமல், காலதாமதமாகவும் அளிக்கப்படுகிறது.

  சீனாவின் வளர்ச்சிக்கு நம்மைத்தான் காரணம் காட்ட வேண்டியுள்ளது. சீனர்களைப் போல இந்தியர்கள் கடுமையாக உழைப்பதில்லை.

   எதையும் நாம் எளிதாக எடுத்துக் கொள்கிறோம். தேசியவாதிகளைப் போல நாம் செயல்படுவதில்லை. நமக்குக் கூடுதலாகப் பணம் கிடைத்தால், வெளிநாடுகளுக்குச் செல்லத் தயாராக இருக்கிறோம்.

  தகவல் தொழில்நுட்பத்திற்கும், அறிவியலுக்கும் சம்பந்தமில்லை. நமது நாட்டில் அறிவியல் உணர்வு இல்லை.

  தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுவோர் அனைவரும் மகிழ்ச்சியில்லாமல் வேலை செய்கிறார்கள். தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்வோர் அடிக்கடி தற்கொலை செய்து கொள்ளும் செய்தியைப் படிக்கிறேன்.

  என்னைப் பாருங்கள், 80 வயதிலும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

  என்னிடம் குறை கூற எதுவுமில்லை. நாம் செய்வதில் திருப்தி கிடைத்தால், அதுதான் மகிழ்ச்சி என்று கருதுகிறேன் என்றார் ராவ்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai