Enable Javscript for better performance
அறிவியல் என்றால் இளைஞராகிவிடுவார் சி.என்.ஆர்.ராவ்: அவரது மனைவி இந்துமதி ராவ்- Dinamani

சுடச்சுட

    

    அறிவியல் என்றால் இளைஞராகிவிடுவார் சி.என்.ஆர்.ராவ்: அவரது மனைவி இந்துமதி ராவ்

    By dn  |   Published on : 18th November 2013 05:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அறிவியல் என்றால் இளைஞராகிவிடுவார் சி.என்.ஆர்.ராவ் என்று அவரது மனைவி இந்துமதிராவ் தெரிவித்தார்.

    அறிவியல் துறையில் சாதனை செய்தமைக்காக விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவரது மனைவி இந்துமதிராவ், செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி: அறிவியல் என்றதும் சி.என்.ஆர்.ராவ் இளைஞராகிவிடுவார். அவரது மாணவர்கள் வயதானவர்களாக தோன்றுவார்கள். அறிவை துடிப்பாகவும், கூர்மையாகவும் வைத்துக்கொண்டால் தான் இளைஞராக இருக்க முடியும். அதை தான் ராவ் செய்து கொண்டிருக்கிறார். சி.என்.ஆர்.ராவ் எப்போது பரபரப்பாக இருப்பார். புதிய அறிவியல் சோதனைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருப்பார். எப்போதும் துடிப்புடன் செயல்பட்டு கொண்டிருப்பார். அவரது நான் அவ்வளவாக நிர்வகிப்பது இல்லை. நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்களாக இருப்போம். அப்படிதான் அவரை நிர்வகித்துவருகிறேன்.

    சி.என்.ஆர்.ராவுக்கு பாரத ரத்னா விருதுவழங்கியிருப்பது எதிர்பாராதது மற்றும் அழகான கௌரவமாகும். வெளிநாடுகளில் இருந்துராவ் பல விருதுகளை பெற்றுள்ளார். ஆனால், நமது நாடு, நாட்டின் உயரியவிருதளித்து கௌரவிக்கும்போது கிடைக்கும் அங்கீகாரம் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருது நீண்டகாலமாக எதிர்ப்பார்க்கப்பட்டதா? என்பதை கூறமுடியாது. ஆனால், வரும்போது விருது வந்துள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai