சுடச்சுட

  

  சி.என்.ஆர்.ராவுக்கு பாரதரத்னா விருது கிடைத்துள்ளது கன்னடர்களுக்கு பெருமை: முதல்வர் சித்தராமையா

  By dn  |   Published on : 18th November 2013 05:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கு பாரதரத்னா விருது கிடைத்துள்ளது கன்னடர்களுக்கு பெருமை அளித்துள்ளது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

  கர்நாடகத்தை சேர்ந்த பிரதமரின் அறிவியல் ஆலோசகர் சி.என்.ஆர்.ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை இந்திய அறிவியல் கழக(ஐஐஎஸ்சி)வளாகத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்த முதல்வர் சித்தராமையா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: சி.என்.ஆர்.ராவுக்கு பாரத ரத்னா விருது கிடைத்துள்ளது கர்நாடகத்தின் 6 கோடி கன்னடர்களுக்கு பெருமை அளித்துள்ளது. ராவ், கன்னடராக இருப்பது நம்மை மகிழ்ச்சியில் துள்ளவைத்துள்ளது. பாரத ரத்னா விருதுபெற்ற பிறகு, கர்நாடகத்தில் சி.என்.ஆர்.ராவுக்கு பாராட்டுவிழா நடத்தப்படும். கிராமப்புறத்தில்பிறந்து, உலக அளவில் போற்றப்படும் விஞ்ஞானியாக உயர்ந்துள்ள ராவை கௌரவிப்பது நமது கடமை. உலகமே போற்றும் சி.என்.ஆர்.ராவ் இந்தியாவின் 121 கோடி மக்களின் பாரத ரத்னா என்று புகழடைந்துள்ளார். ராவ் பெற்றிருக்கும் விருதுகள் கணக்கில் அடங்காதவை. தேசிய, பன்னாட்டுவிருதுகள் பலவற்றை ராவ் பெற்றிருந்தாலும், நமது நாடு பாரத ரத்னா விருது கொடுத்துகௌரவிப்பது கன்னடர்களுக்கு பெருமை தரக்கூடிய தருணமாகும் என்றார் அவர்.

  சி.என்.ஆர்.ராவ் கூறியது: பாரத ரத்னா விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு கிடைத்தவிருதல்ல, இந்திய அறிவியல் சமூகத்திற்கு கிடைத்தவிருது. அறிவியல் துறையில் உலகளவில் இந்தியா 66-ஆவது இடத்தில் உள்ளது. இதை 10 இடத்திற்கு கொண்டுவர விஞ்ஞானிகள் கடுமையாக உழைக்க வேண்டும். தகவல்தொழில்நுட்பத்திற்கும், அறிவியலுக்கும் சம்பந்தம் இல்லை. அறிவியலைவளர்த்தால் மூடநம்பிக்கை தானாகவே மாயமாகும். நான் ஒரு கன்னடன். கன்னடமொழிக்கு அதிகமுக்கியத்துவம் தருவேன். வீட்டில் கன்னடத்தில் தான் பேசுவேன். கன்னடத்தில் படித்தவன். கன்னடத்தில் படித்தால் சாதிக்கலாம் என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.

  மத்திய சிறுதொழில் துறை இணைமைச்சர் கே.எச்.முனியப்பா, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் உள்ளிட்ட ஏராளமானோர் சி.என்.ஆர்.ராவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai