சுடச்சுட

    

    நின்றிருந்த டேங்கர்லாரி மீது பால் வேன் மோதியதில் அதிலிருந்த ஓட்டுநர், கிளினர் உயிரிழந்துள்ளனர்.

    கர்நாடக மாநிலம் சிக்கமங்களூரைச் சேர்ந்தவர் பால் வேன் ஓட்டுநர் சாந்தராஜ் (28), கிளினர் ஷம்பு (20). ஞாயிற்றுக்கிழமை காலை 4.30 மணியளவில் இவர்கள் ஓட்டிவந்த பால்வேன் பெங்களூரு பொம்மசந்திரா ஹுஸ்கூர்கேட் அருகே தேசிய நெடுஞ்சாலை 7-ல் நின்றிருந்த டேங்கர்லாரி லாரி மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த சாந்தராஜ், ஷம்பு அதே இடத்தில் உயிரிழந்துள்ளனர். இது குறித்து ஹெப்பகோடி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai