ரூ.10 ஆயிரம்கோடிமுதலீடுகளை ஈர்க்க புதிய ஜவுளிக்கொள்கை அறிமுகம்
By dn | Published on : 18th November 2013 05:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ரூ.10 ஆயிரம்கோடி முதலீடுகளை ஈர்க்க புதிய ஜவுளிக்கொள்கையை கர்நாடக அரசு அறிமுகம் செய்துள்ளது.
குல்பர்காவில் ஞாயிற்றுக்கிழமை நடந்தவிழாவில் புதிய ஜவுளிக்கொள்கையை ஜவுளித்துறை அமைச்சர் பாபுராவ் சின்சன்சூர் வெளியிட்டார். பின்னர், அவர் பேசியது: இந்தியாவில் முதல்முறையாக கர்நாடக அரசு ஜவுளிக்கொள்கையை அறிமுகம்செய்துள்ளது. இந்த கொள்கையால் அடுத்த 5 ஆண்டுகளில் கர்நாடகத்தில் ரூ.10 ஆயிரம்கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும். இதன்மூலம் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 2018-ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்திற்கு அறிமுகம்செய்துள்ள புதிய ஜவுளிகொள்கை, கர்நாடகத்தில் ஜவுளிதுறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் மாநிலங்களில்ஜவுளிக்கொள்கை அறிமுகம்செய்வது குறித்துஆலோசனை நடைபெற்றுவரும் நிலையில், கர்நாடக அரசு புதிய கொள்கையை அறிவித்துள்ளது. ஜவுளி மற்றும் அதுசார்ந்த தொழில்வளர்ச்சிக்கு புதிய ஜவுளிகொள்கை வழிவகுக்கும். இதன்மூலம் சிறிய மற்றும்நடுத்தர தொழில்முனைவோருக்கு வருவாய் பெருகும். ஜவுளி உற்பத்தியின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதோடு, ஜவுளிக்கான சந்தை வாய்ப்புகளை பெருக்கவும் புதிய ஜவுளிக்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. கொள்கையை அமல்படுத்த ஆண்டுக்கு தலா ரூ.1000 கோடி ஒதுக்கப்படும். கர்நாடகத்தை மூன்று ஜவுளி மண்டலங்களாக பிரித்துள்ளோம். ஜவுளியில் பின் தங்கிய மற்றும் முன்னேறுவதற்கான வாய்ப்புள்ள மாவட்டங்கள் முதல் மண்டலத்தில்