சுடச்சுட

  

  ஊழலை எதிர்த்துப் போராட அனைவரும் ஒன்றுபட வேண்டும்

  By பெங்களூரு  |   Published on : 19th November 2013 05:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஊழலை எதிர்த்துப் போராட இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து  தரப்பினரும் ஒன்றுபட வேண்டும் என்று, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கேட்டுக் கொண்டார்.

  விஸ்கிட்ஸ் ஆபகஸ் நிறுவனம் சார்பில், பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  விழாவில் வேதகால கணிதம், ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி அவர் பேசியது:

  நமது நாட்டின் எதிர்காலத்தை ஊழல் சீரழித்து வருகிறது. இந்தியாவில் இயங்கிவரும் அனைத்து அரசியல் இயக்கங்களும் ஊழலில் ஈடுபட்டுள்ள வரலாறு உண்டு. 2ஜி அலைக்கற்றை, காமன்வெல்த் உள்ளிட்ட ஏராளமான ஊழல்கள் நமது நாட்டின் வளர்ச்சியை பாழ்படுத்தியுள்ளன.

  எதிர்காலத்தில் ஊழலை எதிர்த்துப் போராட இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றுபட வேண்டும். ஊழல் ஒழிப்பில் இளைஞர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இதுகுறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.  கடுமையாக உழைத்தால் மட்டுமே கனவுகளை நனவாக்க முடியும். இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்பது மாணவர்களின் செயல்திறனை மேம்படுத்தும் என்றார் அவர்.

  ஆந்திரம், தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 680 மாணவ, மாணவிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.

  விழாவில் நடிகர் ராமகிருஷ்ணா, ஜீனியஸ் கிட்ஸ் இயக்குநர் நடராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai