Enable Javscript for better performance
ஏழைகளுக்கு பட்டா வழங்க லோக் ஆயுக்த உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடக மாநிலம், கதக் மாவட்டத்தில் ஆஷ்ரயா வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்று, லோக் ஆயுக்த நீதிபதி பாஸ்கர் ராவ் உத்தரவிட்டார்.

    இதுகுறித்து லோக் ஆயுக்த வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    கதக் மாவட்டத்தில் ஆஷ்ரயா வீட்டுவசதி திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வீடுகளுக்கு பட்டா வழங்க அதிகாரிகள் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டபதாகவும் தனியார் தொலைக்காட்சியில் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.

    இந்த விவகாரத்தை லோக் ஆயுக்த தானாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்து விசாரித்தது. இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கதக் மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டது.

    அதன்படி, திங்கள்கிழமை கதக் மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி நேரில் ஆஜராகி, பட்டாக்களை விநியோகிக்க இரண்டு மாதங்கள் கால அவகாசம் கேட்டார். இதை ஏற்காத லோக் ஆயுக்த நீதிபதி பாஸ்கர்ராவ், வருகிற டிசம்பர் 5-ஆம் தேதிக்குள் ஏழைகளுக்கு பட்டா வழங்க வேண்டுமென்றும், அதுகுறித்து டிசம்பர் 6-ஆம் தேதி லோக் ஆயுக்த முன்பு மீண்டும் ஆஜராகி விளக்கமளிக்குமாறும் உத்தரவிட்டார்.

    யாரிடமும் பணம் வாங்காமல் பட்டா விநியோகிப்பதை மக்கள் ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்ககுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai