சுடச்சுட

  

  கர்நாடக முதல்வர் சித்தராமையா பழிவாங்கும் அரசியல் செய்வதாக, அந்த மாநில முன்னாள் முதல்வரும், கர்நாடக ஜனதா கட்சித் தலைவருமான எடியூரப்பா குற்றஞ்சாட்டினார்.

  கர்நாடகத்தில் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஏழைப் பெண்களுக்கும் திருமண நிதியுதவித் திட்டத்தை விரிவுபடுத்த வலியுறுத்தி, பெங்களூரு ஆனந்தராவ் சதுக்கத்தில் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி முதல் தர்னாவில் ஈடுபட்டு வரும் எடியூரப்பா, திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

  கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு சிறுபான்மையின ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவித் திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இந்தத் திட்டத்தை அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஏழைப் பெண்களுக்கும் விரிவுபடுத்த வலியுறுத்தி, கடந்த 19 நாள்களாக தர்னாவில் ஈடுபட்டுள்ளேன்.

  இந்த நிலையில், என்னைச் சமாதானப்படுத்த முதல்வர் சித்தராமையா முயற்சிக்கவில்லை. அவர் பழிவாங்கும் அரசியல் செய்கிறார்.

  வருகிற 24-ஆம் தேதி வரை பெங்களூருவில் தர்னா போராட்டம் நடத்துவேன்.

  பின்னர், பெல்காமில் தொடங்கும் சட்டபேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வேன். எந்தக் காரணத்தைக் கொண்டும் தர்னா போராட்டத்தைக் கைவிடும் எண்ணமில்லை என்றார் எடியூரப்பா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai