சுடச்சுட

  

  சிறந்த சமூகத்தை உருவாக்க மாணவ, மாணவிகளுக்கு கல்வி அவசியம் என்று, குயிஸ்ட் குலோபல் குயிப்ஸ் நிறுவனத் தலைமை செயல் அதிகாரி அஜய் பிரபு தெரிவித்தார்.

  பெங்களூரு கிருஷ்ணராஜபுரம் ஏ-நாராயணபுரா அரசு மாதிரி ஆரம்பப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடக்கிவைத்து, மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி அவர் பேசியது:

  பெங்களூருவில் பல்வேறு தகவல் மற்றும் உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாகியுள்ளன. இதன்மூலம், சர்வதேச அளவில் பெங்களூரு தகவல் தொழில்நுட்பத்தில் புகழ் பெற்ற நகரமாக விளங்குகிறது.

  இந்தத் தொழில் நிறுவனங்களில் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை பணிக்குத்  தேர்ந்தெடுக்கின்றனர். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வியில் சற்று பின்தங்கியுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு, பெங்களூரு கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள ஆரம்பப் பள்ளிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய ஏர்பஸ் மற்றும் எங்கள் நிறுவனம் முன் வந்துள்ளது.

  மேலும், இந்தப் பள்ளிக்கான சுற்றுச் சுவர், சுத்தமான குடிநீர் வசதி, பள்ளி வளாகத்திடையே மரக் கன்றுகள் நடுவது ஆகிய பணிகளை மேற்கொண்டுள்ளோம். இந்தப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை 450 மாணவர்கள் பயில்கின்றனர்.

  அனைத்து மாணவர்களும் சிறந்த கல்வியைப் பெற வேண்டும் என்பது எங்களின் எதிர்பார்ப்பு. நல்ல சமூகத்தை உருவாக்குவதற்கு சிறந்த கல்வி அவசியம். இதேபோல, ஹுப்ளியில் உள்ள அரசு இளநிலை தொழில்நுட்ப பள்ளியை தத்தெடுத்து கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எங்கள் நிறுவனத்தின் சார்பில் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார் அவர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai