Enable Javscript for better performance
சுகாதார முதுநிலைப் பட்டப் படிப்பு: அடுத்த கல்வியாண்டில் தொடங்கத் திட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சுகாதார முதுநிலைப் பட்டப் படிப்பு: அடுத்த கல்வியாண்டில் தொடங்கத் திட்டம்

    By பெங்களூரு  |   Published on : 19th November 2013 05:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராஜீவ் காந்தி பல்கலைக்கழகத்தில் சுகாதார முதுநிலைப் பட்டப் படிப்பு அடுத்த கல்வியாண்டில் தொடங்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக, அந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஸ்ரீபிரகாஷ் தெரிவித்தார்.

    இதுகுறித்து பெங்களூருவில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

    பல்கலைக்கழகத்தில் ராஜீவ் காந்தி சமுதாய சுகாதார நிறுவனம், நோய் தடுப்பு மையத்திற்கு புதிய கட்டடம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூரு தெற்கு வட்டம், கெங்கேரி ஒன்றியம், பீமனகுப்பே கிராமத்தில் 50 ஏக்கரில் இந்தக் கட்டடம் நிறுவப்படும்.

    இந்தக் கட்டடத்தில் உயர்தர ஆராய்ச்சிக் கூடம், விருந்தினர் மாளிகை, ஆராய்ச்சி மாணவர்களுக்கு விடுதி, கூட்ட அரங்கம் ஆகியவை கட்டப்படும். வருகிற 22-ஆம் தேதி நடைபெறும் விழாவில், இந்தக் கட்டடத்திற்கு கர்நாடக ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் அடிக்கல் நாட்டுகிறார்.

    விழாவில் முதல்வர் சித்தராமையா, மத்திய அமைச்சர்கள் ரகுமான்கான், ஆஸ்கர்பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

    அடுத்த கல்வியாண்டு முதல் சுகாதார முதுநிலைப் பட்டப் படிப்பு தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். சுகாதாரம் தொடர்பாக ஆராய்ச்சி பட்டப் படிப்புக்கும் (பி.எச்.டி.) வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். புதிய பட்டப் படிப்பில் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் குறித்த பாடங்கள் இடம் பெறும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai