Enable Javscript for better performance
தமிழ்ச் சங்கத்தில் திருமண மேடை நேர்காணல்- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் திருமண மேடை நேர்காணல் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

    இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கம் வெளியிட்ட அறிக்கை:

    பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் திருமண மேடை 89-ஆவது நேர்காணல் அண்மையில் அதன் சங்க வளாகத்தில் நடைபெற்றது. திரைப்பட பின்னணி பாடகி சசிரேகாவின் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

    சங்கப் பொருளாளர் மு.சம்பத் தலைமை வகித்தார். சங்கச் செயலாளர் வா.ஸ்ரீதரன் அனைவரையும் வரவேற்றார். பெங்களூரு சோழிய வேளாளர் சங்கத் துணைத் தலைவர் தீனதயாளன், அவரது துணைவி சியாமளா ஆகியோர் குத்துவிளக்கேற்றி நேர்காணல் நிகழ்ச்சியை  தொடக்கிவைத்தனர்.

    நேர்காணல் நிகழ்ச்சியில் 45 ஆண்களும், 37 பெண்களும் மேடையில் அறிமுகம் செய்யப்பட்டனர். நிகழ்ச்சி முடிவில் 3 ஜோடிகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத் தலைவர் கோ.தாமோதரன், செயலாளர் வா.ஸ்ரீதரன், திருமண மேடை பொறுப்பாளர் வா.கோபிநாத் ஆகியோர் செய்திருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai