சுடச்சுட

  

  கர்நாடகத்தில் திருமண நிதியுதவித் திட்டத்தை விரிவுபடுத்த வலியுறுத்தி, அந்த மாநில முன்னாள் முதல்வரும், கஜக தலைவருமான எடியூரப்பா மேற்கொண்டுள்ள தர்னாவை கைவிட வேண்டும் என்று, கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.

  இதுகுறித்து பெங்களூருவில் திங்கள்

  கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

  கர்நாடகத்தில் ஏழை முஸ்லிம் பெண்களுக்கு அரசு வழங்கும் திருமண நிதியுதவித் திட்டத்தை அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த ஏழைப் பெண்களுக்கும் வழங்க வலியுறுத்தி, பெங்களூரு ஆனந்தராவ் சதுக்கத்தில் செப்டம்பர் 31-ஆம் தேதியிலிருந்து எடியூரப்பா தர்னாவில் ஈடுபட்டு வருகிறார். அவரை முதல்வர் சித்தராமையாவோ அல்லது அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களோ சந்தித்து தர்னா போராட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும்.

  இந்த நிலையில், வருகிற 25-ஆம் தேதி பெல்காமில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் இந்த பிரச்னை குறித்து பேச எடியூரப்பாவுக்கு வாய்ப்பு உள்ளதால், தர்னாவை கைவிடக் கோரி, அவரைச் சந்தித்து வலியுறுத்துவேன் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai