சுடச்சுட

  

  பெங்களூருவில் டிச. 12 முதல் சதுர்வேத பாராயணம்

  By பெங்களூரு,  |   Published on : 19th November 2013 05:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெங்களூருவில் வருகிற டிசம்பர் 12 முதல் 17-ஆம் தேதி வரை சதுர்வேத பாராயணம் நடைபெறுகிறது.

  இதுகுறித்து வேத மேம்பாட்டு அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கை:

  வேதங்கள் கடவுளின் மூச்சு போன்றது. கடவுள் அழிவில்லாதவர். அதேபோல, வேதங்களும் அழிவில்லாதவை. வேதங்களைப் பரப்புவதற்காக 59 ஆண்டுகளுக்கு முன்பு கே.எஸ்.ராமநாத ஐயர் வேத மேம்பாட்டு அறக்கட்டளையைத் தொடங்கினார்.

  60-ஆவது ஆண்டாக சதுர்வேத பாராயணம், பெங்களூருவில் வருகிற டிசம்பர் 12-ஆம் தேதி தொடங்குகிறது. வித்யாரண்யாபுரத்தில் உள்ள நந்தகிஷோர் பவனில் தினமும் காலை 8 முதல் நண்பகல் 12 வரையிலும், பிற்பகல் 2 முதல் மாலை 6 மணி வரையிலும் பாராயணம் நடைபெறும்.

  இதில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் 080-28462104, 9901131950 என்ற தொலைபேசியில் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai