சுடச்சுட

  

  பெங்களூருவில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்

  By பெங்களூரு  |   Published on : 19th November 2013 05:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெங்களூரு ஊரகத்தில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மர்மக் கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

  பெங்களூரு ஊரகம் தொட்டபெலமங்களா காவல் சரகம் திம்மசந்திராவைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவி, கண்ணமங்களாவில் உள்ள நேதாஜி உயர்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாராம்.

  ஞாயிற்றுக்கிழமை மாலை அந்தப் பள்ளியில் கர்நாடக உதய தின விழாவில் கலந்து கொண்ட அந்த மாணவி, நிகழ்ச்சி முடிந்த பின்னர் அன்று இரவு 8 மணியளவில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாராம்.

  அப்போது, அவரை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பினராம். மயங்கிய நிலையில் அங்கேயே கிடந்த மாணவியை, திங்கள்கிழமை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, தொட்டப்பள்ளாபூர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

  இதுகுறித்து தொட்டமங்களா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இதுகுறித்து மத்திய சரக காவல் ஐஜிபி அமல்குமார் பாண்டே செய்தியாளர்களிடம் கூறியது:

  இந்தச் சம்பவம் தொடர்பாக சிலரை கைது செய்துள்ளோம். மாணவியை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளிகளை அடையாளம் காட்ட முடியாத நிலை உள்ளது என்றார் அவர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai