சுடச்சுட

  

  போலி குடும்ப அட்டைகள் வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ஆணையர் ஹர்ஷாகுப்தா

  By dn  |   Published on : 19th November 2013 11:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  போலி குடும்ப அட்டைகள் வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை ஆணையர் ஹர்ஷாகுப்தா தெரிவித்தார்.

  இது குறித்து தும்கூரில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தனியார் வசம் குடும்ப அட்டைகளை வழங்க அனுமதித்ததால், அதிக அளவு போலி குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே இதனை டிசம்பர்மாத இறுதிக்குள் கண்டறியுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போலி குடும்ப அட்டைகளை வைத்திருப்போர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாநில அளவில் சோதனை செய்து அன்னபாக்யா திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறுகிறதா என ஆராயப்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai