சுடச்சுட

    

    மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்: இருவர் சாவு

    By பெங்களூரு  |   Published on : 19th November 2013 05:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூரு அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

    பெங்களூரு வர்த்தூரைச் சேர்ந்த அல்லம்பாஷா (20), சதாம் ஹுசேன் (18), முராபத் அலி (19) ஆகிய மூவரும் திங்கள்கிழமை அதிகாலை 3.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனராம்.

    காடுகோடி ஓபாரம் சதுக்கம் அருகே எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அல்லம்பாஷா, சதாம் ஹுசேன் ஆகிய இருவரும் அதே இடத்திலே உயிரிழந்தனர்.

    காயமடைந்த முராபத் அலி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து ஒயிட்பீல்டு போக்குவரத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai