சுடச்சுட

  

  குஜராத்தில் மதக் கலவரம் நடந்த போது, அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடி ராஜ தர்மத்தை பின்பற்ற தவறி விட்டார் என்று, ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர் யூ.ஆர்.அனந்த்மூர்த்தி தெரிவித்தார்.

  திப்புசுல்தான் ஐக்கிய கூட்டணி அமைப்பு சார்பில், பெங்களூரு டவுன் ஹாலில் திங்கள்கிழமை நடைபெற்ற திப்புசுல்தானின் 264-ஆவது பிறந்த நாள் விழா, கர்நாடக மாநில உதய தின விழா ஆகியவற்றை தொடக்கிவைத்து அவர் பேசியது:

  அரசாட்சியின் போது, ராஜ தர்மத்தை சரியாக பின்பற்றிய மகான் திப்புசுல்தான். அனைத்து சமுதாய மக்களையும் சமமாக நடத்தியவர் அவரது பிறந்த நாள் விழாவில் இந்துக்கள் பங்கேற்காதது சரியல்ல.  ஆங்கிலேயர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்து போரிட்ட திப்புசுல்தான், தனது இன்னுயிரை நாட்டுக்காக அர்ப்பணித்தார். அவரது பிறந்த நாளை இந்துக்கள், முஸ்லிம்கள் ஆகிய மதத்தினர் இணைந்து கொண்டாட வேண்டும்.

  குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி ராஜ தர்மத்தை பின்பற்றாதவர். குஜராத்தில் மதக் கலவரம் நடந்த போது, ராஜ தர்மத்தை பின்பற்றுமாறு அப்போதைய பிரதமர் வாஜ்பாய் கேட்டுக் கொண்டும், அதை நரேந்திர மோடி பொருள்படுத்தவில்லை.

  அரசாட்சி நடத்துபவர்கள் கட்டாயம் ராஜ தர்மத்தைக் கடைபிடிக்க வேண்டும். ஆனால், மோடி இதைப் பின்பற்றவில்லை. நகைச்சுவை அல்லது மாயாஜால நிகழ்ச்சியைக் காண மக்கள் கூடுவது போல, மோடியின் பொதுக் கூட்டத்திற்கும் மக்கள் திரண்டிருந்தனர் என்றார் அவர்.

  முன்னதாக யூ.ஆர்.அனந்த்மூர்த்திக்கு திப்புசுல்தான் விருது வழங்கப்பட்டது.   விழாவில் எழுத்தாளர் ரகுமான் தரிகெரே, அமைப்புத் தலைவ்ர் சர்தார் அகமது குரேஷி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai