சுடச்சுட

  

  விதிகளை மீறி மணல் கடத்திய 209 லாரிகளை பெங்களூரு ஊரக மாவட்ட ஆட்சியர் வி.சங்கர் பறிமுதல் செய்துள்ளார்.

  பெங்களூரு ஊரகத்தில் விதிகளை மீறி மணல் கடத்துவதாக வந்த புகார்களை அடுத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.30 மணிமுதல் 6 மணிவரை நெலமங்களா, ஹொசகோட்டை, தேவனஹள்ளி, தொட்டப்பள்ளாபூர் வட்டங்களில் பெங்களூரு ஊரக மாவட்ட ஆட்சியர் வி.சங்கர் தலைமையில் அதிகாரிகள் மணல் ஏற்றி வந்த லாரிகளை சோதனை செய்தனர். அப்போது விதிகளை மீறி மணலை ஏற்றி வந்த 209 லாரிகளை பறிமுதல் செய்தனர். நெலமங்களாவில் 98 லாரிகள், ஹொசகோட்டையில் 81 லாரிகள், தேவனஹள்ளியில் 12 லாரிகள், தொட்டப்பள்ளாபூரில் 18 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பிடிப்பட்ட லாரிகளுக்கு தலா ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. விதிகளை மீறி மணல் கடத்துவது குறித்து அதிக அளவில் புகார்கள் வந்த நிலையில், ஆட்சியரின் இந்த செயல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai