சுடச்சுட

  

  கர்நாடகத்தில் குடும்ப அட்டைகளை விநியோகம் செய்வதில் முறைகேடு செய்ததாக 13 நியாய விலை அங்காடிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டன.

  இதுகுறித்து பெங்களூருவில் திங்கள்கிழமை கர்நாடக உணவு மற்றும் பொது வழங்கல் துறை ஆணையர் ஹர்ஷாகுப்தா கூறியது:

  மாநிலம் முழுவதும் குடும்ப அட்டை விநியோகம் தொடர்பாக உணவு மற்றும் பொது வழங்கல் துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒரே புகைப்படம் மற்றும் முகவரியில் பல குடும்ப அட்டைகள் வைத்திருக்கும் 378 அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

  குடும்ப அட்டை முறைகேட்டில் ஈடுபட்ட 13 நியாய விலை அங்காடிகளின் உரிமத்தை அரசு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதுதவிர, 4 உணவு தானிய மொத்த முகவர்கள், 2 மாவட்ட மண்ணெண்ணெய் மொத்த முகவர்கள், 7 குடும்ப அட்டை சேவை மையங்களின் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், இதுதொடர்பாக உணவு ஆய்வாளர்கள் ஒன்பது பேர் பணியிடை நீக்கமும், ஒரு உணவு ஆய்வாளர் பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai