சுடச்சுட

  

  ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க முயன்ற பெண் மீது மர்மநபர் அரிவாளால் தாக்கியுள்ளார்.

  பெங்களூரு ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்தவர் ஜோதிஉதய் (35). இவர் மிஷன்சாலையில் உள்ள கார்பரேஷன் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் அதே பகுதியில் எல்.ஐ.சி கட்டத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது ஏடிஎம் மையத்தில் நுழைந்த மர்மநபர்கள் அவரை அரிவாளால் தலையில் தாக்கியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் ஏடிஎம் மையத்தின் கதவை சாத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். சிறிது நேரத்திற்குப் பிறகு அங்கு வந்த வாடிக்கையாளர் இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலை அடுத்து அங்கு வந்த எஸ்.ஜே.பூங்கா போலீஸார், காயமடைந்த ஜோதி உதயை நிமான்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டப்பகலில் ஏடிஎம் மையத்தில் பெண் ஒருவரை அரிவாளால் வெட்டி தாக்கியுள்ளது நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து மாநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையர் கமல்பந்த் கூறியது: தாக்குதலுக்கு உள்ளான பெண் மயங்கிய நிலையில் உள்ளதால் அவரிடம் விசாரிக்க முடியவில்லை. அவரது நிலைமை சரியானதும் இது குறித்து விசாரணை மேற்கொள்வோம். தாக்குதல் நடத்திய நபர்களை விரைவில் கைது செய்வோம் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai