சுடச்சுட

    

    ஏற்காடு தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து கர்நாடக திமுக பிரச்சாரம்

    By dn  |   Published on : 20th November 2013 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு ஏற்காடு தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து கர்நாடக திமுகவினர் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

    இது குறித்து கர்நாடக மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக கட்சியின் சார்பில் வெ.மாறன் போட்டியிடுகிறார். அங்கு அவரை ஆதரித்து நவ. 24-ம் தேதி முதல் பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிக்க கர்நாடக திமுக முடிவு செய்துள்ளது. மாநில திமுக அமைப்பாளர் ந.இராமசாமி தலைமையில், அவைத்தலைவர் மொ.பெரியசாமி, பொருளாளர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், உறுப்பினர்கள் பிரசாரத்தில் கலந்து கொள்ள உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai