Enable Javscript for better performance
கட்சிகாக உழைத்தவர்களுக்கு உரிய பதவி வழங்கப்படும்: மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஷ்வர்- Dinamani

சுடச்சுட

    

    கட்சிகாக உழைத்தவர்களுக்கு உரிய பதவி வழங்கப்படும்: மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஷ்வர்

    Published on : 20th November 2013 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கட்சிகாக உழைத்தவர்களுக்கு உரிய பதவி வழங்கப்படும் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஷ்வர் தெரிவித்தார்.

    பெங்களூரு சுதந்திரபூங்காவில் செவ்வாய்க்கிழமை முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 96-வது பிறந்த நாள்விழா மாநில காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு அவர் பேசியது: மாநிலத்தில் கட்சிக்காக உழைத்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய பதவிகள் வழங்கப்படும். திங்கள்கிழமை புதுதில்லியில் சோனியா, ராகுல்காந்தியை நானும், முதல்வர் சித்தராமையாவும் சந்தித்தப்போது அவர்கள் இதனை வலியுறுத்தியுள்ளனர். வரும் மக்களவை தேர்தல், வாரியம், கழகங்களுக்கான தலைவர்கள் குறித்தும் அங்கு விவாதித்தோம். பெங்களூருவில் நரேந்திரமோடியின் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதனால் எந்த விளைவும் ஏற்பட போவதில்லை. மாநிலத்தில் தகவல் தொழில்நுட்ப புரட்சியை செய்தது காங்கிரஸ் அரசு என்பது மக்களுக்கு தெரியும். காங்கிரஸ் ஆட்சி பொறுப்பை ஏற்றப்பிறகு பல்வேறு திட்டங்களை அறிவித்து மக்களின் ஆதரவை பெற்று வருகிறது. முன்னாள் முதல்வர் எடியூரப்பா திருமண உதவி திட்டத்தை அனைத்து சமுதாய ஏழை பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்று தர்னா போராட்டம் நடத்தி வருகிறார். அவர் முதல்வராக இருந்தப்போது ஏன் இந்த திட்டத்தை அவர் அறிவிக்கவில்லை என்பதனை மக்களுக்கு விளக்க வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai