சுடச்சுட

  

  கிராமங்களில் மாணவர்கள் இணையதள பயன்பாட்டை தெரிந்து கொள்ள வேண்டும்: அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல்

  Published on : 20th November 2013 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிராமங்களில் மாணவர்கள் இணையதள பயன்பாட்டை தெரிந்து கொள்ள வேண்டும் என்று மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல் தெரிவித்தார்.

  பெங்களூரு விதானசௌதாவில் செவ்வாய்க்கிழமை தேசிய அளவில் மாணவர்களுக்கான இணையதள பயன்பாடு பயிற்சி முகாமை அறிமுகம் செய்து வைத்து அவர் பேசியது: கர்நாடக மாநில தகவல், உயிரி தொழில் நுட்பத்தின் முதன்மையாக விளங்குகிறது. இணைய தள பயன்பாட்டிலும் நகரப்பகுதிகளில் சிறந்து விளங்குகிறது. ஆனால் கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு இணையதளத்தை எப்படி பயன்படுத்துவது என்ற அறிவு குறைவாக உள்ளது. இதனை மேம்படுத்தும் வகையில் கர்நாடகத்தில் மாணவர்களுக்கான இணையதள பயன்பாடு பயிற்சி முகாம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 400 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 18 ஆயிரம் கணினிகள் இடம்பெறும். இதில் கிராமங்களில் உள்ள பள்ளிமாணவர்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டும். 2020-ம் ஆண்டுகுள் கர்நாடகம் டிஜிட்டல் கல்வியில் சிறந்து விளங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர். நிகழ்ச்சியில் இன்டல் நிறுவனத்தின் கல்வி பிரிவுக்கான தேசிய மேலாளர் அனில் மிஸ்குயித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai