சுடச்சுட

  

  நரேந்திரமோடி பிரதமர் ஆனால் மக்கள் நிம்மதியாக வாழமுடியாது: முதல்வர் சித்தராமையா

  By dn  |   Published on : 20th November 2013 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குஜராத் முதல்வர் நரேந்திரமோடி பிரதமர் ஆனால் மக்கள் நிம்மதியாக வாழமுடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

  பெங்களூரு சுதந்திரபூங்காவில் செவ்வாய்க்கிழமை முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 96-வது பிறந்த நாள்விழா மாநில காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட முதல்வர், அவரது உருவப்படத்திற்கு மலர்மாலை தூவி மரியாதை செய்த பின்னர் பேசியது: நவ. 17-ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற பொது கூட்டத்தில் குஜராத்முதல்வர் நரேந்திரமோடி கலந்து கொண்டுள்ளார். மோடியின் வித்தைகள் கர்நாடகத்தில் ஒரு போதும் எடுபடாது. அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததன் மூலம் இது உறுதியாகியுள்ளது. விரைவில் எதிர்கொள்ளும் மக்களவை தேர்தலில் மக்கள் இதனை தெளிவு படுத்துவார்கள். மாநிலத்தில் 20-க்கும் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெரும். ஜாதி, மதத்தின் பெயரால் கட்சியை நடத்தி வரும் பாஜகவை மாநிலத்தில் எங்கும் தலைதூக்காத வகையில் மக்கள் உரிய பாடம் கற்பிக்க வேண்டும். பாரதம் வெல்லட்டும் என நரேந்திரமோடி நடத்திய பேரணி, பொதுகூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழைகள்ப்பற்றி பேசாமல், ஏதோ வந்தார், கூட்டத்தில் கலந்து கொண்டார், விமானம் ஏறி தனது ஊருக்கு போனார். தகவல் தொழில் நுட்பம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது வளர்ச்சி பெற்றதாக அவர் மிகப்பெரிய பொய்யை கூறிவிட்டு சென்றுள்ளார். பாஜக கட்சியினர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஒரு பொய்யை 100 முறை சொல்லி உண்மையாக்க பார்க்கின்றனர். அது கர்நாடகத்தில் ஒரு போதும் முடியாது. பாஜக ஆட்சியில் முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, சதானந்தகௌடா, ஜெகதீஷ்ஷெட்டர் ஆகியோர் மாநிலத்தின் சொத்துகளை அபகரித்தனர். குஜராத்தில் கடந்த 12 ஆண்டுகளாக முதல்வராக நரேந்திரமோடி ஆட்சி செய்து வருகிறார். அங்கு முறைகேடுகள் தலைவிரித்தாடுகின்றன. சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை. நரேந்திரமோடி நாட்டின் பிரதமரானால் மக்கள் நிம்மதியாக வாழமுடியாது. நாட்டின் ஒற்றுமை கேள்விக்குறியாகிவிடும் என்றார்.

  மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுனகார்கே பேசியது: முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஏழைகளின் நலனில் அக்கறை கொண்டிருந்தார். தன் உயிரை கொடுத்து நாட்டை கட்டிய பெருமை அவருக்கு உள்ளது. அவரது தியாகத்திற்கு இணையில்லை என்றார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வீரப்பமொய்லி, மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai