சுடச்சுட

    

    நரேந்திரமோடி பொதுக்கூட்டத்திற்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி: மாநகர காவல்துறை ஆணையர்

    Published on : 20th November 2013 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நரேந்திரமோடி பொதுக்கூட்டம், பேரணிக்கு முழு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி என்று மாநகர காவல்துறை ஆணையர் ராகவேந்திர அவுராத்கர் தெரிவித்தார்.

    இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: நவ. 17-ம் தேதி பெங்களூருவில் குஜராத்முதல்வர் நரேந்திரமோடியின் பொதுக்கூட்டம், பேரணி நடைபெற்றது. இதற்காக 15 நாட்களாக போலீஸார் முழு பாதுகாப்பு பணியின் ஈடுபடுத்தப்பட்டனர். காரணம் பிகார் மாநில பாட்னாவில் அவர் கலந்து கொண்ட பொதுகூட்டத்தில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதனால் 7 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். அது போன்றதொரு சம்பவம் மீண்டும் நடைபெற வாய்ப்பு தரக்கூடாது என மாநில அரசு கண்டிப்பான உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து மாநகர போலீஸார் முழு மூச்சில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் பொதுமக்களுக்கு சிறிது அசௌக்கிரியம் ஏற்பட்டிருக்கக் கூடும். என்றாலும் இதனையெல்லாம் பொறுத்துக் கொண்டு நரேந்திரமோடியின் பொதுக்கூட்டம், பேரணிக்கு முழு ஒத்துழைப்பு அளித்த பொதுமக்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது நன்றி என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai