நெல் விலையை உயர்த்த வலியுறுத்தி நவ. 21-ல் நடைபயணம்
Published on : 20th November 2013 12:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நெல்விலையை உயர்த்த வலியுறுத்தி நவ.21-ம் தேதி பெங்களூரு ரயில்நிலையத்திலிருந்து விதானசௌதாவை நெல்விவசாயிகள் நடைபயணம் மேற்கொள்கின்றனர்.
இது குறித்து கர்நாடக மாநில விவசாய சங்கம் துணைத்தலைவர் ஓம்காரப்பா செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: நவ. 21-ம் தேதி மாநிலத்தில் உள்ள நெல் விவசாயிகள் குவின்டால் நெல்லுக்கு ரூ. 2500 ஆதரவு விலையை உயர்த்தவும், 18 மணிநேரம் 3 பேஸ் மின்சாரத்தை வழங்கவும், தொழிற்சாலைகளுக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்க வலியுறுத்தியும் பெங்களூரு ரயில்நிலையத்திலிருந்து விதானசௌதாவரை நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.