மாநிலத்தில் அதிக அளவில் ரயில்பாதைகள் அமைக்க வேண்டும்: முதல்வர் சித்தராமையா
By dn | Published on : 20th November 2013 12:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மாநிலத்தில் அதிக அளவில் ரயில்பாதைகள் அமைக்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
சிக்மகளூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் நிலையத்தை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டு அவர் பேசியது: ரயில்வேதுறை இந்திய பொருளாதாரத்தை பெருக்குவதில் முக்கிய துறையாக விளங்கிறது. அதே போல் மாநிலத்தின் வருவாயை உயர்த்துவதற்கு அதிக அளவில் ரய்யில் பாதைகளை அமைக்க வேண்டும். மத்தியில் ரயில்வேத்துறை அமைச்சர்களாக கர்நாடகத்தை சேர்ந்த ஜாபர்ஷெரீப், முனியப்பா, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டவர்கள் இருந்துள்ளதால், அதிக அளவு ரயில்பாதைகளை மாநிலத்தில் அமைத்துள்ளனர். என்றாலும் இன்னும் அதிகம் ரயில்பாதைகளை கர்நாடகத்தில் அமைக்க வேண்டும். ரயில்வே பாதைகள் அமைப்பதற்கு ஆகும் செலவினை மத்திய அரசுடன் மாநில அரசு பகிர்ந்து கொள்ளும். ஆனால் ரயில்பாதைகளை அமைப்பதற்கான நிலங்களை கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகளுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. பொதுநலம் கருதி ரயில் பாதை அமைக்க பல விவசாயிகள் தங்களது நிலங்களை வழங்கியுள்ளனர். அவர்களுக்கும் நாம் அனைவரும் நன்றி கூறவேண்டும் என்றார் அவர். நிகழ்ச்சியில் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுனகார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.