வறட்சி பகுதிகளை அறிவிப்பத்தில் அரசு அரசியல் செய்கிறது: மஜத மூத்த தலைவர் எச்.டி.ரேவண்ணா
By dn | Published on : 20th November 2013 12:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மாநிலத்தில் வறட்சி பகுதிகளை அறிவிப்பத்தில் அரசு அரசியல் செய்கிறது என்று மஜத மூத்த தலைவர் எச்.டி.ரேவண்ணா தெரிவித்தார்.
இது குறித்து பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அண்மையில் அரசு 22 மாவட்டங்களில் 64 வட்டங்களை வறட்சிப்பகுதியாக அறிவித்துள்ளது. அறிவித்துள்ள அந்த பகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்ற தொகுதிகளாக உள்ளன. ஹொலேநரசிப்புரா, சென்னராயபட்டணா வட்டங்கள் வறட்சிபகுதிகளாக உள்ளப்போதும் அதனை அரசு வறட்சி பகுதியாக அறிவிக்காமல் அரசியல் செய்கிறது.பேலூர், அரகல்கூடு பகுதியில் நல்ல மழை பெய்துள்ள போதும், அதனை வறட்சி பகுதியாக அரசு அறிவித்துள்ளது. கடந்த 6 மாதங்களாக ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதில் குறியாக உள்ளது. மாநிலத்தில் ஜனநாயக முறையில் ஆட்சி நடைபெற வில்லை. நீண்டநாட்களாக ஆட்சியில் இல்லாமல் தற்போது ஆட்சியை பிடித்துள்ள காங்கிரஸ் அரசில் அமைச்சர்கள் மக்கள் பிரச்னையை மறந்து தங்கள் சொந்த பிரச்னையை தீர்த்து கொள்வதில் குறியாக உள்ளனர். சித்தராமையா தலைமையிலான அரசின் குறைகளை பெல்காமில் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் நாங்கள் எடுத்துரைப்போம். காங்கிரஸ் அரசு மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. மூடநம்பிக்கை தடுப்பு மசோதாவை பெல்காம் சட்டப்பேரவை கூட்டத்தில் அரசு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. சட்டப்பேரவைக்கு எலுமிச்சை பழங்களுடன் நான் செல்லப்போகிறேன். என்னை அரசு என்ன செய்கிறது என்பதனை பார்க்கிறேன் என்றார் அவர்.