சுடச்சுட

  

  வாரியம், கழங்களுக்கு விரைவில் தலைவர்கள் நியமனம்: முதல்வர் சித்தராமையா

  Published on : 20th November 2013 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாரியம், கழகங்களுக்கு விரைவில் தலைவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

  பெங்களூரு விதானசௌதாவில் செவ்வாய்க்கிழமை முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 96-வது பிறந்த நாளையொட்டி தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கர்நாடக மாநிலத்தில் அமைச்சரவையில் தற்போது மாற்றங்கள் எதுவும் செய்யப்படமட்டாது. இது குறித்து மேலிடத்தலைவர்களுடன் எந்த பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை. ஆனால் வாரியம், கழங்கங்களுக்கு விரைவில் தலைவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இது குறித்து ராகுல்காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. 3 மாதங்களுக்கு ஒரு முறை ராகுல்காந்தியை சந்தித்து அரசின் செயல்பாடுகள், அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும். திங்கள்கிழமை நானும், மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரும் சோனியா, ராகுகாந்தியை சந்தித்து பேசினோம். அதில் அமைச்சரவை மாற்றும் குறித்து எதுவும் பேசவில்லை. ஆனால் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக வீண் வதந்தி பரவியுள்ளது. வாரியம், கழகங்களின் தலைவர்கள் நியமிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினோம் என்றார் அவர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai