Enable Javscript for better performance
கர்நாடகத்தில் அரசு அறிவித்த திட்டங்கள் எதுவும் அமலுக்கு வரவில்லை: மஜத- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடகத்தில் அரசு அறிவித்த திட்டங்கள் எதுவும் அமலுக்கு வரவில்லை: மஜத

    By பெங்களூரு,  |   Published on : 21st November 2013 06:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடகத்தில் அரசு அறிவித்த திட்டங்கள் எதையும் முறையாக அமல்படுத்தவில்லை என்று, அந்த மாநில மஜத பேரவை கொறடா மதுபங்காரப்பா குற்றஞ்சாட்டினார்.

    பெங்களூருவில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

    மக்களவை பொதுத் தேர்தலை எதிர்க்கொள்ள மஜத ஆயத்தமாகி வருகிறது. எனது தந்தையும், கர்நாடக முன்னாள் முதல்வருமான பங்காரப்பாவின் குடும்பத்திலிருந்து எனது தாய் அல்லது யாராவது ஒருவர் கர்நாடக மாநிலம், ஷிமோகா மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவார்கள்.

    பெல்காமில் வருகிற 25-ஆம் தேதி தொடங்கும் சட்டப்பேரவை குளிர்காலக்  கூட்டத் தொடரில் காங்கிரஸ் அரசின் தோல்விகளை சுட்டிக் காட்டுவேன். கடந்த 6 மாதங்களில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு வெறும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு வந்துள்ளது.

    அறிவித்த எந்தத் திட்டமும் முறையாக அமலுக்கு வரவில்லை. காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக அமையவில்லை. இதனால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    மூடநம்பிக்கை ஒழிப்புக்கு தனிச் சட்டம் தேவையில்லை. தற்போதைய சட்டங்களை முறையாக அமல்படுத்தினாலே மூடநம்பிக்கைகளை ஒழிக்கலாம்.

    திருமண நிதியுதவித் திட்டத்தை அனைத்து சமுதாயத்துக்கும் விரிவுப்படுத்த வலியுறுத்தி, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா நடத்தி வரும் தொடர் தர்னா, அரசியல் நாடகம் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai