சுடச்சுட

  

  தேசிய நெடுஞ்சாலைகளில் தானியங்கி சுங்க வரி வசூல் இயந்திரம்

  By பெங்களூரு  |   Published on : 21st November 2013 05:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேசிய நெடுஞ்சாலைகளில் தானியங்கி சுங்க வரி வசூல் இயந்திரம் அமைக்கப்படும் என்று, மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் தெரிவித்தார்.

  இந்திய கட்டுமானக் கருவிகள் உற்பத்தியாளர்கள் சங்கம், கர்நாடக அரசு, மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை, மத்திய கனரக தொழில் மற்றும் பொதுத் துறை ஆகியவற்றுடன்  இணைந்து இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், பெங்களூரு பன்னாட்டு கண்காட்சி மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற கட்டுமானத் தொழில்நுட்பக் கண்காட்சியைத் தொடக்கிவைத்து அவர் மேலும் பேசியது:  தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க வரி மையங்களில் வரி வசூல் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

  இதைத் தவிர்க்கும்  வகையில், சுங்க வரி மையங்களில் தானியங்கி வரி வசூல் இயந்திரங்கள் அமைக்கப்படும்.அடுத்த மூன்று மாதங்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்.

  நிலங்களைக் கையப்படுத்துவதில் பிரச்னை உள்ளதால், பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் முதல் கட்டமாக 7,522 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் மேம்படுத்தப்படும். இரண்டாம் கட்டமாக 6,647 கி.மீ. தொலைவுக்கும், மூன்றாம் கட்டமாக 12,109 கி.மீ. தொலைவுக்கும் சாலைகள் மேம்படுத்தப்படும்.

  முதல் கட்டமாக இதுவரை 4,179 கி.மீ. தொலைவுக்கு சாலைப் பணிகள் முடிவடைந்துள்ளன என்றார் ஆஸ்கர் பெர்னாண்டஸ்.

  கண்காட்சியில் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, கண்காட்சித் தலைவர் விதின் செüந்தி, இந்திய தொழில் கூட்டமைப்புத் தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai