சுடச்சுட

  

  புதிய நிறுவனங்கள் சட்டம் பெருநிறுவனங்களின் போக்கை மாற்றும்'

  By பெங்களூரு  |   Published on : 21st November 2013 06:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதிய நிறுவனங்கள் சட்டம் 2013, இந்திய பெருநிறுவனங்களின் போக்கை மாற்றக் கூடியதாக அமையும் என்று, இந்திய பெருநிறுவனங்களுக்கான விவகாரங்கள் மையத்தின் இயக்குநர் ஜெனரல் பாஸ்கர் சாட்டர்ஜி தெரிவித்தார்.

  அசோசெம் நிறுவனம் சார்பில், பெங்களூருவில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கைத் தொடக்கிவைத்து அவர் பேசியது:

  மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ள புதிய நிறுவனங்கள் சட்டம் 2013, இந்திய பெருநிறுவனங்களின் போக்கை மாற்றக் கூடியதாக அமையும். புதிய சட்டம், பெருநிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரும்.

  இந்தச் சட்டம், இந்தியாவின் பெருநிறுவனங்களுக்கான ஒழுங்குமுறை அத்தியாயத்தை மாற்றும். கடந்த 5 ஆண்டுகளில் 6 அமைச்சர்களுடன் விவாதித்து இந்த புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

  அனைத்து தரப்பினரிடமும் இந்தச் சட்டத்தின் சாதக, பாதகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

  இந்தச் சட்டம் அரசு, தொழில் துறை, கணக்கு தணிக்கையாளர்கள், ஒழுங்குமுறையாளர்கள் ஆகியோருக்கு சவாலானதாக அமையும்.

  நமது நாட்டின் பொருளாதாரம், தொழில் சீரமைப்பை ஒழுங்குப்படுத்த அனைத்துத் தரப்பினரின் கூட்டு பங்களிப்பை இந்தச் சட்டம் நிலைநிறுத்தும் என்றார் அவர்.

  அசோசெம் நிறுவனத்தின் துணைத் தலைவர் சுனில்கனோரியா பேசியது:

  நமது நாட்டின் பெருநிறுவனங்களின் கட்டமைப்பை இந்தச் சட்டம் ஒழுங்குமுறைப்படுத்தும். நிறுவனங்களின் இணைப்புக்கு இந்தச் சட்டம் உதவியாக இருக்கும். தேசிய நிறுவன சட்டத்  தீர்ப்பாயம், தனிநபர் நிறுவனங்கள் அமைக்கவும் இந்தச் சட்டம் வழி வகுக்கும் என்றார் அவர்.

  கருத்தரங்கில் கர்நாடக தொழில்வர்த்தகசபைக் கூட்டமைப்புத் தலைவர் ஆர்.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai