சுடச்சுட

  

  பெங்களூருவில் உள்ள பைரசந்திரா ஏரியைச் சீரமைக்கும் பணி ஐந்து மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்று, கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.

  பெங்களூருவில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் பைரசந்திரா ஏரியைச் சீரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிய பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

  பெங்களூருவில் உள்ள ஏரிகளில் மிகவும் பழமையானது பைரசந்திரா ஏரி. இது 15 ஏக்கரில் அமைந்துள்ளது. ஆக்கிரமிப்பிலிருந்து இந்த ஏரியைப் பாதுகாக்க இந்தப் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

  இந்த ஏரியைச் சீரமைக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. அடுத்த ஐந்து மாதங்களுக்குள் சீரமைப்புப் பணி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்த போது, இந்த ஏரியை சீரமைக்க ரூ. 1.2 கோடி ஒதுக்கினார்.

  அப்போது ஏரி நிலத்தை சிலர் சொந்தம் கொண்டாடினர். இதுதொடர்பான வழக்கில் அரசு வெற்றி பெற்றுள்ளது என்றார் அவர்.

  பெங்களூரு மேயர் சத்தியநாராயணா பேசியது:

  பைரசந்திரா ஏரியைச் சீரமைக்க பெங்களூரு வளர்ச்சி ஆணையம் நிதி ஒதுக்கியுள்ளது. கூடுதல் நிதி தேவைப்பட்டாலும் மாநகராட்சி அதற்கான நிதி ஒதுக்கும் என்றார் அவர். விழாவில் சிக்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ ஆர்.வி.தேவராஜ், மாமன்ற உறுப்பினர்கள் உதய்சங்கர், கங்கபைரய்யா, மல்லிகார்ஜுன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai